ம.பி: இரு பத்திரிகையாளர்கள் கைது

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளிக்காட்டியதாக இரு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-08-26 11:13 GMT
நீமூச் (ம.பி)

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான இளம் பெண்ணை பேட்டி எடுத்த இரு பத்திரிகையாளர்கள் அவரின் சம்மதத்துடன் பேட்டியை காணொலியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் அவரது உறவினருடன் பேசிய அவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால் காணொலியை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் சொல்லியபடி வலைத்தளங்களில் காணொலியை அவர்கள் வெளியிட்டு விட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் துறையிடம் புகார் அளித்தார். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணை வெளிப்படையாக அடையாளம் காட்டியதாக காவல் துறையினர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் கேரளத்தில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் அவர் பெயரை வெளிப்படையாக கூறியதற்கு அகில இந்திய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது மத்திய பிரதேசத்தில் இரு பத்திரிகையாளர்கள் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்