டெல்லியில் தலைகீழாக நடந்து தமிழக விவசாயிகள் போராட்டம்
தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 56–வது நாளாக போராட்டம் நடத்தினர்.;
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 56–வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது, சில விவசாயிகள் தலைகீழாக நடந்தனர். பிற விவசாயிகள் அவர்களின் கால்களை தாங்கிபிடித்த நிலையில் கேரள அரசு இல்லம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதற்கிடையே, மேலும் சில விவசாயிகள் தங்களது கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டிக்கொள்ள, அந்த கயிற்றின் நுனியை பிடித்து இழுக்குமாறு அங்கிருந்த போலீசாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், போலீசார் ஓட்டம் பிடித்தனர். அதன்பின்னர் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஜந்தர் மந்தர் ரோட்டில் மறியலுக்கு படுப்பதை போல படுத்துக் கொண்டனர்.