கேரளா: பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்.எல்.ஏ. கைது

கைது செய்யப்பட்ட ராகுல் சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update:2026-01-11 18:41 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில் (வயது 36). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரு வழக்குகளிலும் ராகுலுக்கு கோர்ட்டு முன் ஜாமின் கொடுத்துள்ளது.

இதனிடையே, ராகுல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 8ம் தேதி மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். பத்தனந்திட்டா மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அந்த பெண் ஆன்லைன் மூலம் ராகுல் மீது கேரள போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராகுல் தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும், புகார் தொடர்பாக கனடாவில் இருந்தவாறு பாதிக்கப்பட்ட பெண் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் போலீசில் வாக்குமூலமும் அளித்தார்.

இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகுலை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்