பாலியல் பலாத்கார முயற்சியை தடுத்த பெண் கொடூரமான முறையில் கொலை

பாலியல் பலாத்கார முயற்சியை தடுத்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2017-10-13 18:36 IST

பாட்னா,

பாட்னா புறநகர் பகுதியில் புதன் கிழமை இரவு வெளியே சென்ற பெண்ணை இருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அவர்களை பதிலுக்கு தாக்கி பெண் தப்பிக்க முயற்சி செய்து உள்ளார். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடியாத நிலையில் அவரை கொடூரமான முறையில் தாக்கி இரும்பு கம்பியால் அவருடைய அந்தரங்க உறுப்பை சிதைத்து உள்ளனர். பின்னர் வேதனையில் வீடு திரும்பிய பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். மறுநாள் காலையில் பெண் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து உள்ளார். பெண்ணிற்கு 4 குழந்தைகள் உள்ளது, கணவர் வேலைக்கு சென்று இருந்தபோது இச்சம்பவம் நடந்து உள்ளது.

போலீசார் பெண்ணை பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர், ஆனால் அவர் இரத்த போக்கு காரணமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் சிறப்பு படையை அமைத்து உள்ளது. குற்றவாளி குமார் பஸ்வான் (வயது 22) கைது செய்யப்பட்டு உள்ளான். மற்றொரு குற்றவாளி தர்மேந்திர குமாரை கைது செய்ய போலீஸ் வலை வீசி வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேசிய பெண்கள் ஆணையம் பீகார் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. தேசிய அளவில் கடந்த 2015-ல் நடந்துள்ள குற்றங்கள் பட்டியலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட போது, 34,210 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது, இவ்வரிசையில் பீகார் மாநிலம் 14-வது இடம் பிடித்து இருந்தது.

மேலும் செய்திகள்