மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்து மிரட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் - கேரளாவில் பரபரப்பு
மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முஜீப் என்பவர் திடீரென கையில் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களை மிரட்டியுள்ளார். அவர் மருத்துவமனையில் யாரோ ஒருவரை தேடியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்ற முஜீப், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் முஜீப் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முஜீப்பை தேடி வருகின்றனர்.