மணிப்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

மணிப்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.;

Update:2017-11-16 03:18 IST

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் மியான்மர் நாட்டின் எல்லையையொட்டி உள்ள சமோல் என்கிற கிராமத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலர் நேற்று அதிகாலை பாதுகாப்பு படைகளை தாக்குவதற்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அசாம் ரைபிள் படையை சேர்ந்த ராணுவவீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவவீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ராணுவவீரர்களும் திருப்பி சுட்டனர்.  இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 3 பயங்கரவாதிகளும், 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்