மக்களுடன் ஆளுநர் இணைந்து செயல்படுவதில் தவறில்லை-கிரண்பேடி கருத்து
மக்களுடன் ஆளுநர் இனைந்து செயல்படுவதில் தவறில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.;
புதுச்சேரி,
தமிழக ஆளுநர் ஆய்வு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:
மக்களுடன் ஆளுநர் இணைந்து செயல்படுவதில் தவறில்லை. ஆளுநர்கள் கோப்புகளில் மட்டும் கையெழுத்திடுபவர்களாக இருக்க வேண்டியதில்லை. மக்கள் நலத்திட்டம் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரம் உள்ளது. ஆய்வுசெய்ய ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் திட்டங்கள் குறித்த கோப்புகள் அனுமதிக்காக வருவது ஏன்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.