அரசு தேர்வு வாரிய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் இருந்து ‘காப்பி’ அடிக்கப்பட்ட கேள்விகள்!

அருணாச்சல பிரதேச மாநில அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட கேள்விகள் இடம்பெற்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2017-12-12 17:49 IST
கவுகாத்தி,

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அரசு பணிக்கு போட்டி தேர்வை எழுதும் ஏபிபிஎஸ்சி நடத்தி வருகிறது. மாநில தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பாகிஸ்தான் இணையதளத்தில் இடம்பெற்று இருந்த கேள்விகள் இடம்பெற்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என்ற குற்றச்சாட்டு விவகாரம் புயலை கிளப்பிய நிலையில் இந்த சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும்  www.cssforum.com.pk இணையதளத்தில் இருந்து பாதிக்கும் மேலான கேள்விகள் காப்பி அடிக்கப்பட்டு கேள்விதாளாக வழங்கப்பட்டு உள்ளது. 

நேர்த்தியான எந்தஒரு வழிமுறையும் பின்பற்றப்படாமல் 2008-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணய கேள்விகளும் காப்பி அடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் கேள்வித்தாளில் இடம்பெற்று இருந்த தவறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அருணாச்சல பிரதேச மாநில தேர்வுகள் வாரியம் தன்னுடைய தார்மீக பொறுப்பை மீறிஉள்ளது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு எழுதியவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர், கேள்வித்தாளில் இடம்பெற்று இருந்த முக்கால்வாசி கேள்விகள் இணையதளத்தில் காப்பி செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்