லவ் ஜிகாத் என கூறி கொலை செய்தவரின் மனைவி வங்கி கணக்கில் குவிந்த பணம்

ராஜஸ்தானில் முகமது அப்ரசுலை உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்புலால் ரேகர் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் நன்கொடையாக வந்துள்ளது தெரியவந்துள்ளது.

Update: 2017-12-14 10:52 GMT
ஜெய்ப்பூர்

கடந்த 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக முகமது அப்ரசூல் என்றகூலித் தொழிலாளியை, சம்புலால் ரேகர் என்பவர் கோடாரியால் வெட்டி, மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்தார்.

மேலும் இந்த கொலையானது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து சம்புலால் ரேகர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சம்புலால் மனைவியின் வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சம் பணம் நன்கொடையாக வந்துள்ளது தெரியவந்துள்ளது, தகவலறிந்த போலீசார், உடனடியாக வங்கி கணக்கை முடக்கினர்.

மேலும் ராஜஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து 516 பேர்கள் 'நெட்பேங்கிங்  மூலமாக நன்கொடையாக அனுப்பியுள்ளனர்.

பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த தொகைக்கான ரசீதின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்தே போலீசுக்கு இத்தகவல் தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் இரண்டு வியாபாரிகளை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் சம்புலால் ரேகருக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்