முத்தலாக் வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் பா.ஜ.க.வில் இணைந்தார்

முத்தலாக்-குக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பிரபலமான இஷ்ரத் ஜஹான் பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.#TripleTalaq #IshratJahan #BJP

Update: 2018-01-01 04:47 GMT
கொல்கத்தா

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக்குக்கு தடை விதித்து புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், முத்தலாக் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா நகரில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

இதுதொடர்பாக, மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், இஷ்ரத் ஜஹான் ஹவுரா நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இணைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்