சீனர்கள், இந்திய பகுதிக்குள் ஒரு கி.மீ. தூரம் ஊடுருவினர் இந்திய படைகளின் எதிர்ப்பால் திரும்பி சென்றனர்

இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அருணாசலபிரதேசத்துக்குள் சீனர்கள் ஊடுருவிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-01-03 22:45 GMT
இடாநகர், 

சீன பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ஊழியர்கள் சிலர், கடந்த 28-ந் தேதி, அருணாசலபிரதேசத்தில் டுடிங் பகுதியில் ஊடுருவினர்.

இந்திய பகுதிக்குள் ஒரு கி.மீ. தூரம் அவர்கள் வந்து விட்டனர். அவர்களை பார்த்த அங்குள்ள கிராம மக்கள், ஒரு போலீஸ்காரரிடம் தெரிவித்தனர். போலீஸ்காரர், இந்தோ திபெத்திய எல்லை படையிடம் தெரிவித்தார். அப்படையினர் சீன ஊழியர்களை எதிர்கொண்டு, திரும்பி செல்லுமாறு வற்புறுத்தினர்.

சிறிது நேர வாக்குவாதத்துக்கு பிறகு, சீனர்கள் திரும்பி சென்றனர். 2 பொக்லைன் எந்திரங்கள் உள்பட சாலை போட பயன்படும் சாதனங்களை அப்படியே விட்டுவிட்டு சென்றனர். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீருடை அணிந்த சீன ராணுவத்தினர் சிலரும் இந்திய படையின் எதிர்ப்பால் பின்வாங்கி சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்