மும்பையில் சோகம்: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்து 3 பேர் உடல் கருகி பலி

தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2026-01-10 12:05 IST

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் கோரேகான் மேற்கு பகுதியில் ராஜாராம் தெருவில் பகத்சிங் நகர் என்ற இடத்தில் அதிகாலை 3 மணியளவில் வீடு ஒன்றில் அனைவரும் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென தீ பரவியுள்ளது.

அந்த தீயானது மளமளவென தரை தளம் மற்றும் மாடிக்கும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தில், தரை தளத்தில் படுத்திருந்த 2 ஆண்களும், மாடியில் இருந்த ஒரு பெண்ணும் சிக்கி கொண்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் உள்ளூர் மக்கள் வாளிகளில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மின் இணைப்பையும் துண்டித்து விட்டனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், தீயில் உடல் கருகி 3 பேரும் உயிரிழந்து விட்டனர். அவர்கள் ஹர்ஷதா பவாஸ்கர் (வயது 19), குஷால் பவாஸ்கர் (வயது 12), சஞ்சோக் பவாஸ்கர் (வயது 48) என அடையாளம் காணப்பட்டனர். நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலியானது அந்த பகுதியினரிடையே பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்