பத்மாவத் படத்திற்கு எதிராக அமைதி போராட்டம் - பா.ஜனதா தலைவர்; தீபிகா தலைக்கு ரூ. 10 கோடி அறிவித்தவர்!

பத்மாவத் படத்திற்கு எதிராக அமைதி போராட்டம் நடத்துவோம் என பா.ஜனதா தலைவர் சுராஜ் பால் அமு கூறிஉள்ளார். #Padmaavat #BJP

Update: 2018-01-18 10:04 GMT

சண்டிகார், 


பத்மாவத் திரைப்படத்துக்கு குஜராத், மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் நிலவிய சிக்கல் தீர்ந்து உள்ளது. இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜபுத்திர தலைவர் சுராஜ் பால் அமு பேசுகையில், அமைதியான முறையில் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என கூறிஉள்ளார். “நாங்கள் கோர்ட்டு உத்தரவை ஏற்கிறோம். நாங்கள் படித்தவர்கள், நாங்கள் சட்டத்திற்கு மதிப்பளிக்கிறோம். அமைதியாக போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது. 

படம் ராஜபுத்திர சமூதாய மக்களை காயப்படுத்தும் என்பது எங்களுடைய நம்பிக்கையாகும்,”என கூறிஉள்ளார். 

பத்மாவதி படம் தொடர்பான சர்ச்சை உச்ச நிலையில் இருந்தபோது கடந்த நவம்பர் மாதம் சுராஜ் பால் அமு பேசுகையில், தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்த மீரட் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களுடைய தலையை எடுப்பவருக்கு நாங்கள் ரூ. 10 கோடி பரிசு வழங்குவோம், அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதியையும் நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மாவத் படம் வெளியிடப்பட்டால் இந்தியா உடையும் எனவும் எச்சரிக்கைவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்