ஆன்மிகப் பயணமாகவே இமயமலை வந்துள்ளேன், அரசியல் பயணம் இல்லை - ரஜினிகாந்த்

ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன், அரசியல் பயணம் இல்லை என ரஜினிகாந்த் கூறிஉள்ளார். #Rajnikanth

Update: 2018-03-13 08:55 GMT

டேராடூன்,

அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் ரஜினிகாந்த் முக்கிய விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று விமர்சனம் செய்தார். கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் தெரிவிக்க மறுக்கிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், “ரஜினிகாந்த் இதுமட்டும் அல்ல பல்வேறு விஷயங்களில் அப்படிதான் இருக்கிறார்,” என்று கூறினார். ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். 

இன்று டேராடூன் வந்த அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர் பேசுகையில், இப்போது ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன். நான் ஒரு யாத்ரீகராக இங்கு வந்து உள்ளேன். இதில் அரசியல் பேசுவதற்கு எதுவும் கிடையாது. இப்போதுதான் அமிதாப்பச்சன் உடல்நிலைக்குறைவு தொடர்பாக தகவல் கிடைத்தது, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றார். 

மேலும் செய்திகள்