தந்தையை கோடாரியால் தாக்கி 14 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை
இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்புரில் தந்தையை கோடாரியால் தாக்கி அவரது 14 வயது மகளுக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். #HamirpurRape;
ஹமிர்புர்,
இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்புரில் உள்ள பிவார் பகுதியில் வயலுக்கு சென்று வீடு திரும்பிய 14 வயது பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் காப்பாற்ற முயன்ற தந்தையையும் கோடாரியால் தாக்கி இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் துணை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் கூறுகையில், ”ஹமிர்புரில் உள்ள பிவார் பகுதியில் வயலுக்கு சென்ற பெண் தன் தந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் தன் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையையும் அக்கும்பல் கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆனந்த்குமார், சஞ்சய் மற்றும் சந்த்பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம். மருத்துவ பரிசோதனை அறிக்கையை பெற்ற பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.