டெல்லியில் பள்ளி வேன் விபத்து; 1 மாணவர் பலி, 17 பேர் காயம்

டெல்லியில் நடந்த பள்ளி வேன் விபத்தில் 1 மாணவர் பலியானார். மேலும் 17 பேர் காயமடைந்தனர். #Delhi #SchoolVanAccident

Update: 2018-04-26 07:52 GMT
புதுடெல்லி,

வடமேற்கு டெல்லியில் உள்ள கன்ஹாயா நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பால் டேங்கர் ஒன்று தனியார் பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதல் சம்பவத்தில் பள்ளி மாணவர் ஒருவர்  உயிரிழந்ததோடு 17 பேர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த வாகன ஓட்நனர் இருவரும் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

காயமடைந்த குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும் சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. பள்ளி வாகனத்தில் அதிகப்படியான மாணவர்களை ஏற்றிச்சென்றதால் இந்த விபத்து நிழந்ததா என்ற கோணத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்களிடம் விசாரணை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அந்த பள்ளி வேனில் 18 மாணவர்கள் இருந்ததாகவும், அதில் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களே பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆபத்தான நிலையில் உள்ள நான்கு மாணவர்கள் சுஷ்ருதா காய மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்