சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் ரூ.120 கோடி பணம், நகை பறிமுதல்

கர்நாடகாவில் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Update: 2018-05-05 23:15 GMT
புதுடெல்லி,

பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி சந்தேகத்துக்கிடமான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இதுவரை ரூ.67.27 கோடி பணம், ரூ.23.36 கோடி மதிப்பிலான மது, ரூ.43.17 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.39.80 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் குக்கர், சேலைகள், தையல் எந்திரங்கள், லேப்டாப் உள்பட ரூ.18.57 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் மற்றும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ரூ.32.54 கோடிக்கான பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தது. எனவே அந்த பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.120 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்