ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரெயில்வே, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. #UnionCabinet

Update: 2018-05-16 13:07 GMT

புதுடெல்லி,

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய ரெயில்வே துறை மற்றும் பிரான்ஸ் நாட்டிலுள்ள எஸ்.என்.சி.எப். நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.  இது ரெயில்வே துறையில் தொழில் நுட்ப ஒத்துழைப்பிற்கு பயன்படும்.

ரெயில்வே பிரிவில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் விவரங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்திய ரெயில்வேக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

இந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான சட்ட துறையில் ஒத்துழைப்பு, சுவாசிலாந்து இடையேயான சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் சூரிநேம் நாட்டுடன் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாக துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் ஈகுவாடோரியல் கினியா இடையேயான மருத்துவ செடிகள் துறையில் ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையை தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்