ஜம்முவில் பணிநேரத்தில் ஆப்சென்ட்; 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் ஆய்வு செய்ததில் பணிநேரத்தில் அலுவலகங்களில் இல்லாத 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2018-08-30 15:24 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்ட துணை ஆணையாளர் ராணா, கூடுதல் துணை ஆணையாளர் கிஷோரி லால் தலைமையில் புதிய குழுக்களை அமைத்து உள்ளார்.

இந்த குழுக்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி கூடங்கள், சுகாதார நல மையங்கள் போன்றவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.  இதில் பணிநேரத்தில் இருக்க வேண்டிய பல அதிகாரிகள் அனுமதியற்ற நிலையில் அலுவலகங்களில் இல்லாமல் இருந்துள்ளனர்.

இதில், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோரும் அடங்குவர்.  ஊழியர்களின் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத முறையிலான தவறான நடவடிக்கைகள் சமூகத்திற்கு எதிரானது என குறிப்பிட்ட ராணா அவர்களது சம்பளத்தினை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து கூடுதல் மாவட்ட வளர்ச்சி ஆணையாளர் தின்னை விசாரணை அதிகாரியாக நியமித்து இதுபற்றி 7 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்