தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்கை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

உஜ்ஜைன்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர். பீகாரில் பாட்னாவில் ஜன் அதிகர் கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தின் போது இயக்கப்பட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். 

இதில் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதே போன்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயின் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் பங்க்கை அடித்து நொறுக்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
மத்தியப் பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
2. மத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை
மத்திய பிரதேசத்தில் 8-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3. மத்திய பிரதேசத்தில் அருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் மாயம் - 45 பேர் மீட்பு
மத்திய பிரதேசத்தில் அருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் மாயமாயினர்.
4. 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நீதி கிடைக்க வேண்டி பொது மக்கள் போராட்டம்
8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் நீதி கிடைக்க வேண்டி ஆயிரக்கணக்கான பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கர்ப்பமாக இருக்கிறோமா என சோதனையிட்டார்கள் போலீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவிகள் குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் கர்ப்பமாக இருக்கிறோமா என சோதனையிட்டார்கள் என போலீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவிகள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.