தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் மாண்ட்லா கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். #UPDalitStudent
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மாண்ட்லா கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த மாணவர் இரண்டாம் வருட மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும், நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் வட்ட அதிகாரி ரிஷ்வான் அகமத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாணவனின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் உடனேயே கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதியளித்த பின்னர் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.