நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு - ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-21 17:36 GMT
மும்பை,

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 1.207 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,600 கோடி) உயர்ந்து 400.489 பில்லியன் டாலராக (சுமார் ரூ.28 லட்சம் கோடி) இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது முந்தைய வாரத்தில் 399.282 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னிய செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஏப்ரல் 13–ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 426.028 பில்லியன் டாலராக இருந்தது. பின்னர் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இது சரிவடைந்தது. இதில் தற்போது உயர்வு கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதைப்போல கடந்த 14–ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பும் 144 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1000 கோடி) அதிகரித்து 20.378 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1.46 லட்சம் கோடி) இருந்ததாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்