மின்கம்பி அறுந்து விழுந்ததால் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி

அசாம் மாநிலம் நகவுன் மாவட்டம் காடோவல் என்ற இடத்தில் ஒரு குளம் உள்ளது. அதன் மேலே 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது.

Update: 2018-09-21 23:00 GMT

கவுகாத்தி,

உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து குளத்தில் விழுந்தது. கிராம மக்கள் அதை கவனித்தனர். மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து, மின்சாரத்தை துண்டிக்கச் செய்தனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் தைரியமாக குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினர். அப்போது திடீரென மின்சப்ளை வந்தது. இதனால் மின்சாரம் பாய்ந்து பலரும் துடித்தனர். இதில் 6 பேர் பலியானார்கள்.

சம்பவம் தொடர்பாக, மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவி அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்