காகித கட்டுகளை லஞ்சம் ஆக கேட்ட அதிகாரியை வலை விரித்து பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்

காகித கட்டுகளை லஞ்சம் ஆக கேட்ட நில ஆவண பதிவு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறையினர் வலை விரித்து பிடித்துள்ளனர்.

Update: 2018-09-22 13:13 GMT

மும்பை,

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் 36 வயது நபர் ஒருவர் தனது நிலம் தொடர்புடைய ஆவணம் ஒன்றை பெறுவதற்காக நில ஆவண பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த முரளிதர் தாக்கரே (வயது 51) என்ற அதிகாரி ஆவணத்திற்கான கட்டணம் செலுத்த கூறியுள்ளார்.  அதன்பின் பிரின்ட் அவுட் எடுக்க காகிதம் தேடி உள்ளார்.  ஆனால் வெற்று காகிதங்கள் எதுவும் இல்லாத நிலையில் அந்நபரிடம் பிரின்ட் அவுட் எடுக்க காகித கட்டுகளை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

ஆனால் அந்த நபர் நாசிக் லஞ்ச ஒழிப்பு துறையை அணுகி இதுபற்றி கூறியுள்ளார்.  இதனை அடுத்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், காகித கட்டுகளை தாக்கரே பெறும்பொழுது அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்