2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி கர்நாடகாவில் போட்டியிடுகிறாரா? எடியூரப்பா பதில்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்திலிருந்து போட்டியிடுகிறாரா? என்ற கேள்விக்கு எடியூரப்பா பதிலளித்துள்ளார்.

Update: 2018-10-08 11:57 GMT

பெங்களூரு, 


தென் இந்தியாவில் பா.ஜனதாவின் செல்வாக்கை உயர்த்தும் விதமாக பிரதமர் மோடி 2019 பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள 4 மாநிலங்களில் போட்டியிடலாம் என உள்ளூர் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டது. பா.ஜனதாவிற்கு கர்நாடகாவை தவிர்த்து பிற மாநிலங்களில் சொல்லும்படியாக தனி பலம் கிடையாத காரணத்தினால் அவர் கர்நாடகாவில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியது. பிரதமர் மோடி இப்போது வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அதனை தவிர்த்து கர்நாடகாவில் போட்டியிடலாம் என செய்தியில் குறிப்பிடப்பட்டது.

இதுதொடர்பான செய்திகள் வைராக பரவிய நிலையில் மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா அதற்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும் எடியூரப்பா, பா.ஜனதாவின் உயர்மட்ட குழு புதன் கிழமையன்று வேட்பாளர்களை முடிவு செய்யும் என்றார். 

கர்நாடகாவில் மோடி போட்டியிடுகிறார் என வெளியான செய்திக்கு பதிலளித்து பேசிய எடியூரப்பா, இதற்கான சாத்தியம் கிடையாது. முற்றிலும் தேவையற்ற செய்தி பரப்பப்படுகிறது. அதில் பொருள் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்