பிரமோஸ் ஏவுகணை என்ஜினீயருக்கு மாதம் ரூ. 22 லட்சம் சம்பளத்தில் கனடாவில் வேலையென ஆசைவார்த்தை

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரமோஸ் ஏவுகணை என்ஜினீயருக்கு மாதம் ரூ. 22 லட்சம் சம்பளத்தில் கனடாவில் வேலையென ஆசைவார்த்தை கூறப்பட்டுள்ளது.

Update: 2018-10-10 12:25 GMT


நாக்பூர், 


மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது. பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களின் பெயரில் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பாகிஸ்தான் உளவுத்துறை கூறிய ஆசைவார்த்தையில் சிக்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செஜால் கபுர் என்ற பேஸ்புக் கணக்கில் கனடாவை சேர்ந்தவர் நிஷாந்த் அகர்வாலுடன் தொடர்ச்சியாக ஷாட் செய்து வந்துள்ளார். பின்னர் லிங்-இன் இணையதளத்திற்கு வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான லிங்கை இ-மெயிலில் அனுப்பியுள்ளார். இ-மெயிலில் நிஷாந்த் அகர்வால் கிளிக் செய்தபோது அவருடைய கம்ப்யூட்டரில் மேல்வார் தீங்கிழைக்கும் மென்பொருள் தரவிறக்கம் ஆகியுள்ளது. அப்போது நிஷாந்த் அகர்வால் கம்ப்யூட்டரில் இருந்த தகவல்களை திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கனடாவிலிருந்து அனுப்பட்ட லிங் மூலமாகவே பாகிஸ்தான் உளவுப்பிரிவின் வலையில் சிக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே எவ்வளவு முக்கியமான தகவல்கள் திருடப்பட்டது என்பது நிஷாந்த் அகர்வாலுக்கே தெரியாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே நிஷாந்த் மேலும் சிலரது பெயரை தெரிவித்துள்ளதாகவும், அவர்களிடமும் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்