அரசு ஊழியர்களின் ஊழல் தொடர்பாக வரும் மொட்டை கடிதங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் - பல்வேறு துறைகளுக்கு, மத்திய அரசு உத்தரவு

அரசு ஊழியர்களின் ஊழல் தொடர்பாக வரும் மொட்டை கடிதங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பல்வேறு துறைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-10 22:00 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மீது அடிக்கடி போலியான ஊழல் புகார்கள் எழுவது உண்டு. குறிப்பாக சில ஊழியர்களை பதவி உயர்வுக்காக பரிசீலிக்கும் போது, அவர்களின் கீழ் உள்ள அல்லது சக ஊழியர்கள் இதுபோன்ற புகார்களை வைத்து உயர் அதிகாரிகளுக்கு மொட்டை கடிதம் எழுதுகின்றனர்.

இத்தகைய மொட்டை கடிதங்கள் அல்லது உண்மைகளை கொண்டு எழுதப்படும் கற்பனை கடிதங்கள் சமீப காலமாக அதிகமாக மத்திய அரசுக்கும், மத்திய ஊழல் கண்காணிப்பு துறைக்கும் வருகின்றன. எனவே இது தொடர்பாக அரசின் அனைத்து துறைகளுக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், அரசு ஊழியர்களின் ஊழல் தொடர்பாக வரும் மொட்டை கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது போன்ற புகார் கடிதங்களை வெறுமனே சேமித்து வைத்தால் மட்டும் போதும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்