டெல்லி அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாத சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு

ஆதார் அட்டை இல்லை என்பதற்காக டெல்லி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-10-11 16:29 GMT

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை சேர்ந்த சிறுமி பிரியா (வயது 9) டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.  ஆனால் சிறுமியிடம் டெல்லியில் இருப்பதற்கான ஆதார் அட்டை இல்லை.  இதனால் சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து டெல்லி பாரதீய ஜனதா தலைவர் மனோஜ் திவாரி, மத்திய மந்திரி நட்டாவை குறிப்பிட்டு டுவிட்டரில் தகவல் பதிவிட்டு உள்ளார்.  இந்த சிறுமிக்கு சிகிச்சை கிடைப்பது தவிர்த்து நவராத்திரிக்கு வேறு எந்த சிறந்த விசயமும் கிடையாது என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

இதன்பின் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.  அவரது உத்தரவின்படி, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்