பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர் - கேரள அமைச்சர் கே.கே. சைலஜா

பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர் என கேரள அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார்.

Update: 2018-10-17 11:14 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதற்கு காங்கிரஸ், பா.ஜனதா எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தடுத்து வருகிறார்கள். இதனால் போலீசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநில அமைச்சர் கே.கே. சைலஜா பேசுகையில், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். 

 “அங்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்க முடியும். இது தூண்டிவிடப்படுகிறது. அவர்கள் (போராட்டக்காரர்கள்) மோசமான அரசியலை நடத்துகிறார்கள். அவர்கள் வழக்கமான பக்தர்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும்,” என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் நிலக்கலில் நடந்த போராட்டம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பத்தினம்திட்டா ஆட்சியர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்