தெருநாய்க்கு மதுபானம் கொடுத்த இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

கைது செய்யப்பட்ட ஜிதேந்திரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;

Update:2026-01-05 17:28 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கீர்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் தனது கிராமத்தில் உள்ள தெருநாய்க்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்துள்ளார். தெருநாய்க்கு ஜிதேந்திரா மதுபானம் கொடுப்பதை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தெருநாயை கொடுமைபடுத்தி அதற்கு மதுபானம் கொடுத்த ஜிதேந்திராவை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜிதேந்திரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்