பொங்கல் பரிசுத் தொகுப்பு - விநியோகத்தைத் தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி

3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது.;

Update:2026-01-05 17:38 IST

புதுச்சேரி,

புதுச்சேரில் ரூ.800 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே. ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு ஊழியர்கள். கவுரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்த்து மொத்தம் 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு இந்தப் பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தத் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300 கிராம் நெய், 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய் ஆகியன இருக்கும். புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் (கான்பெட்) இதைக் கொள்முதல் செய்து வழங்குகிறது. இதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.26 கோடி செலவாகும். மேலும். இதில் கூட்டுறவு பால் நிறுவனமான பாண்லேவில் இருந்து நெய் விநியோகம் செய்ய அந்த நிறுவனத்துக்கு ரூ.8.75 கோடி அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்