அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்கிறார்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-18 07:08 GMT
நாக்பூர், 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத், இதற்காக சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:- “ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான வழியை, போதிய சட்டங்கள் மூலமாக அரசு எளிதாக்க வேண்டும். 

அந்த பகுதியில், ராமர் கோவில் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கின்ற போதும், ஜென்மபூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்படவில்லை. நீதிமன்ற நடைமுறைகளை தாமதம் ஆக்குவதற்காக சில சக்திகள் புதிய புதிய தலையீடுகளை முன்வைப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. “ என்றார். 
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், எதிர்க்கட்சிகள் கூட ராமர் கோவில் அயோத்தியில் கட்டக்கூடாது என்று வெளிப்படையாக கூறுவதில்லை என கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்