சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை உளவு பார்க்கிறோமா? உளவுத்துறை மறுப்பு

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-25 07:41 GMT


புதுடெல்லி,


மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. 

நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அலோக் வர்மாவும், அஸ்தானாவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லியில் முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவின் வீட்டிற்கு வெளியே சந்தேகத்திற்கு இடமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியது. ஆனால் டெல்லி போலீஸ் கமிஷ்னர் மாதூர் வர்மா இதனை மறுத்தார். இதற்கிடையே பாதுகாவலர்கள் 4 பேரை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியது. அவர்கள் உளவுத்துறை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியது. அவர்களுடைய நோக்கம் என்ன? என்ற கேள்விகளும் எழுந்தது.

இதற்கிடையே சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா உளவுப்பிரிவு வளைத்தில் என்ற தகவலை உளவுத்துறை மறுத்துள்ளது. வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள்தான், ஆனால் வேறு விதமாக கதைகள் எழுப்பப்படுகிறது என உள்துறையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. டெல்லியின் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் வரும் பகுதிகளில் உளவுத்துறை பிரிவு வழக்கமாக நிலை நிறுத்தப்படும் என உள்துறை அதிகாரிகள் விளக்கமளித்து உள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்