இந்திரா காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா காந்தி , ராகுல் உள்ளிட்டோர் மரியாதை

இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி , ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Update: 2018-11-19 02:56 GMT
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மற்றும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரில் கடந்த 1917-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர் இந்திரா காந்தி. இவரது 101-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லி சக்தி ஸ்தால் பகுதியில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்