அவசர நிலைக் காலத்தைவிட மோசமான நிலை சபரிமலையில் நிலவுகிறது மத்திய அமைச்சர் அல்போன்ஸ்

சபரிமலையில் காரணமின்றி 144தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நிலைக் காலத்தைவிட மோசமான சூழல் நிலவுவதாகவும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-19 08:36 GMT
திருவனந்தபுரம்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 

வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ள கேரள அரசு சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்க ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை நோக்கி சென்ற மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து கொட்டாரக்காரா கிளைச் சிறையில் காலை அடைத்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இரவு 7மணிக்கு மேல் செல்லக் கூடாது என விதிமுறை இருப்பதாகக் கூறி நடைப்பந்தல் என்னுமிடத்தில் இருந்த பக்தர்களைக் கீழே உள்ள முகாமுக்குச் செல்லக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட எழுபது பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்துக் காவல்நிலையத்திலும் அவர்கள் சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டனர். காவல்துறையின் கட்டுப்பாடுகளைக் கண்டித்துத் திருவனந்தபுரத்தில் முதலமைச்சரின் இல்லத்தின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மத்திய மந்திரி அல்போன்ஸ் சபரிமலைக்குச இன்றுச் என்று ஆய்வு நடத்தினார் அவர்  செல்லும் வழியில் கூறும் போது  பக்தர்கள் தீவிரவாதிகள் இல்லை என்றும், அப்படி இருக்கையில் சபரிமலையில் 15ஆயிரம் காவலர்கள் எதற்கு என்றும் வினா எழுப்பினார். காரணமின்றி 144தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியை மாநில அரசு போர்ப்பகுதியாக மாற்றி உள்லது. அவசர நிலைக் காலத்தைவிட மோசமான நிலை சபரிமலையில் நிலவுவதாகவும் அல்போன்ஸ் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்