கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்பு

கடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடித்து தள்ளப்பட்டதாக மும்பை ஐகோர்ட்டில் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-12-07 02:04 GMT
மும்பை, 

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்று அலிபாக் கடற்கரையோரத்தில் இருந்தது. இந்த பங்களா கடற்கரை மண்டல விதிகளை மீறி, சட்ட விரோதமாக கட்டப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, நிரவ் மோடியின் சட்டவிரோத பங்களா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 

இதன்படி மராட்டிய அரசு சார்பில் ஐகோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அலிபாக் கடற்கரையோரத்தில் இருந்த நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களா கடந்த 5-ந்தேதி இடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்