ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவியேற்பு

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2018-12-17 05:50 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், 100 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.  இதன்படி,  ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் மற்றும் துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் முதல் மந்திரியாக  அசோக் கெலாட், துணை முதல் மந்திரியாக  சச்சின் பைலட் ஆகியோர் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.  ஆனால் இந்த பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

மேலும் செய்திகள்