முந்தைய அரசுகள் உட்கட்டமைப்பு விசயங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை; பிரதமர் மோடி

முந்தைய அரசுகள் உட்கட்டமைப்பு விசயங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2018-12-18 16:06 GMT
புனே,

மகாராஷ்டிராவில் புனே மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  24 கி.மீ. தொலைவில் ஏற்படுத்தப்படும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான 3வது கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அதன்பின் அவர் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, எதிர்க்கட்சிகளிடம் இருந்து வேறுபட்டு எனது அரசு சிந்தனை செய்கிறது.  அவர்களது சிந்தனையிலேயே அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க விட்டு விடுங்கள் என கூறினார்.

எங்களுடைய அரசின் நோக்கம் சமூகத்தில் கடைநிலை மனிதனுக்கும் சென்றடையும் வகையிலான சமநிலையிலான வளர்ச்சியை அடைய போராடுவதே ஆகும்.  முந்தைய அரசுகள் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி விசயங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை.  அவர்கள் அதனை செய்திருக்க வேண்டும்.

ஏ.பி. வாஜ்பாய் அரசில் (1998-2004) மெட்ரோ ரெயில் திட்டம் ஊக்கம் பெற்றது.  அரசு சில காலம் அதிகாரத்தில் நீடித்து இருப்பின், இந்த விரைவு போக்குவரத்து திட்டம் நாட்டின் நகரங்களில் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்