சத்தீஸ்கார் அமைச்சரவையில் மேலும் 9 பேருக்கு மந்திரி பதவி

சத்தீஸ்கார் அமைச்சரவையில் மேலும் 9 பேருக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டு மந்திரி சபை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

Update: 2018-12-25 11:15 GMT
ராய்ப்பூர் 

சத்தீஸ்காரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சராக பூபேஷ் பாகல் கடந்த 17-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் தம்ராத்வஜ் சாஹூ, சிங் தியோ  ஆகிய இரு அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், மேலும் 9 எம்எல்ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சத்தீஸ்கார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடம் அளிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்காரைப் பொறுத்தவரை, அமைச்சரவையில் அதிகபட்சமாக 13 பேர் இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்