கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை - அருண் ஜெட்லி

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-12 11:07 GMT
புதுடெல்லி,

“மோடி அரசின் கொள்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அடைந்த பலன்கள்” என்ற தலைப்பில்  மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.  ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வித வரியையும் உயர்த்தவில்லை. மறைமுக வரிகள், ஜிஎஸ்டி என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.  இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 97 கோடி இழப்பு ஏற்படுகிறது.

எனவே ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த வரியையும் உயர்த்தாமல் ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் கோடி வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளது. 

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்