புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Update: 2019-01-16 15:22 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயவேணி.  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் காரில் தனது வீட்டுக்கு சென்று உள்ளார்.

இவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.  இந்த சம்பவத்தில் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தன.  இதுபற்றி தகவல் அறிந்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்