பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2019-01-22 21:45 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளித்து, சில மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து வர்த்தக பிரமுகர் தெஹ்சீன் பூனாவல்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சுப்ரீம் கோர்ட்டு 1992-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதன் கொள்கை பொருளாதார ரீதியில் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. சமுதாய விலக்குகளால் வேரூன்றப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டதை மீறும் வகையில் இந்த சட்டதிருத்தம் உள்ளது. மேலும் மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வு, ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. ஆனால் சமீபத்திய சட்டம் மூலம் கிட்டத்தட்ட 60 சதவீதம் இடஒதுக்கீடு வருகிறது. எனவே இந்த சட்டதிருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இந்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்