”மனதின் எண்ணத்திற்கு ஏற்றபடி மனிதனின் உயர்வு இருக்கும்” திருக்குறளுடன் பேச்சை முடித்தார் பிரதமர் மோடி

மனதின் எண்ணத்திற்கு ஏற்றபடி மனிதனின் உயர்வு இருக்கும் என திருக்குறளுடன் தனது பேச்சை பிரதமர் மோடி முடித்துக்கொண்டார்.

Update: 2019-02-10 11:47 GMT
சென்னை,

திருப்பூரில் பெருமாநல்லூரில்  நடைபெற்ற பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மோடியை வசைப்பாடுவதையே எதிர்க்கட்சிகள் பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள், மோடியை தோற்கடிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். வருத்தத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எப்போதும் மோடி மோடி என பேசி வருகிறார்கள், எதைப்பற்றி கேட்டாலும் மோடி என்பார்கள்  வாரிசு அரசியலை வளர்ப்பதும், குடும்பத்தினரை பாதுகாப்பதுமே எதிர்க்கட்சியின் திட்டம். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களை திசைத்திருப்பும் பணியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6 ஆயிரம் நிதியுதவி வழங்க இருக்கிறது மத்திய அரசு. இந்த திட்டத்தால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயம், மீனவர்கள் பற்றி கவலைப்படும் ஆட்சி பாஜக ஆட்சி, மீன்வளத்திற்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

10% இட ஒதுக்கீட்டால் பிற இடஒதுக்கீடுகள் எந்த வகையிலும் பாதிக்காது.காங்கிரஸ், திமுக கூட்டணியில் இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

தாம் ஒருவர் மட்டுமே அறிவாளி என நினைக்கிறார், மறு எண்ணிக்கை அமைச்சர் அவர் - ப.சிதம்பரம் குறித்து பிரதமர் மோடி மறைமுக தாக்கி பேசினார். அதனால் தான் அவர்களை தோற்கடித்தார்கள், மீண்டும் மீண்டும் தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள் என பேசினார்.

மனதின் எண்ணத்திற்கு ஏற்றபடி மனிதனின் உயர்வு இருக்கும் என திருவள்ளுவர் கூறியுள்ளார்.வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு' என்ற திருக்குறளுடன் தனது பேச்சை பிரதமர் மோடி முடித்தார். பாஜக கூட்டத்தில் வேண்டும் மோடி, மீண்டும் மோடி என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் செய்திகள்