காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான 40 துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி - நடிகர் அமிதாப்பச்சன் அறிவிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 40 துணை ராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார்.

Update: 2019-02-16 21:45 GMT
புதுடெல்லி,

காஷ்மீரில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் 2500 துணை ராணுவத்தினர் (மத்திய ரிசர்வ் போலீசார்) காஷ்மீருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, புல்வாமா அருகே பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் சிக்கி 40 துணை ராணுவத்தினர் பலியானார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

தாக்குதலில் பலியான 40 துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதி உதவியை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார்.

நேற்று கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் அறக்கட்டளை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமிதாப்பச்சன் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரர்கள் பலியான சம்பவத்தை அறிந்ததும், அவர் உடனடியாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார்.

மேலும் செய்திகள்