வினாத்தாள் கசிவு விவகாரம்; மேற்கு வங்காளத்தில் இரு மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் மாநில வாரிய தேர்வில் வினாத்தாள்களை கசிய விட்ட விவகாரத்தில் இரு மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-18 10:26 GMT
மேற்கு வங்காளத்தில் மாநில வாரிய தேர்வு கடந்த 12ந்தேதி தொடங்கியது.  இந்த தேர்வினை 10 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்கள் எழுதி வருகின்றனர்.  இதில் ஆங்கிலம், வங்காளம், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய தேர்வுகள் அடுத்தடுத்து நடந்தன.  இவற்றின் வினாத்தாள்கள் பல்வேறு மாவட்டங்களில் கசிகின்றன என புகார்கள் வந்தன.  இதனை தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சஹாபுல் அமீர் மற்றும் ஷாபாஸ் மொன்டல் ஆகிய இரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று சஜிதூர் ரஹ்மான் என்பவரும் மற்றும் இரு தேர்வாளர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த 5 பேர் தவிர்த்து மற்ற குற்றவாளிகளையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.  வினாத்தாள்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் ஊடகம் வழியே வெளியிடப்பட்டு உள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்