குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் குடியரசு துணை தலைவர் நேரில் சந்திப்பு
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், குடியரசு தலைவர் முர்மு தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதுபற்றிய புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் வலைதள பதிவில், ஜனாதிபதி அலுவலகம் பகிர்ந்து கொண்டது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்தியில், நாட்டின் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, இன்று நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார் என தெரிவித்து உள்ளது. புது வருட வாழ்த்துகளை உயர்மட்ட அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் பகிர்ந்து கொள்வது மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆங்கில புது வருட பிறப்பையொட்டி, நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
அப்போது அவர், புதுப்பிக்கப்பட்ட சக்தி, நேர்மறையான மாற்றத்திற்கான நேரம் இது என குறிப்பிட்டதுடன், தேச கட்டமைப்பில் கூட்டு பொறுப்புணர்வுக்கான தருணம் இது என்றும் குறிப்பிட்டார்.