சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு: ராபர்ட் வதேராவிடம் அமலாக்க துறை விசாரணை

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்க துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.

Update: 2019-02-20 18:17 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்து, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிரயான்ஸ்டன் சதுக்கத்தில் 19 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.17½ கோடி) மதிப்பில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்க துறை இயக்குனரகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.நேற்று உடல்நலக்குறைவால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு அவர் அமலாக்க துறை இயக்குனரகத்தில் தனது வக்கீல்களுடன் விசாரணைக்காக ஆஜரானார்.

அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்களை பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்