நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க சி.பி.ஐ. நடவடிக்கை

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய நகை வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச்சென்றார். இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

Update: 2019-03-19 22:43 GMT

புதுடெல்லி, 

நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடிக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்காக லண்டனில் எடுக்கப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்து வருகிறோம். இதற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்துவருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்