6 வயது சிறுவனின் இரக்க குணம், சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் ஆகும் புகைப்படம்

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனின் இரக்க குணத்தை கண்டு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Update: 2019-04-04 04:35 GMT
சைராங்,

மிசோரம் மாநிலத்தில் உள்ள சைராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன் டிரெக் எ லால்சன்ஹிமா. 6 வயது சிறுவனான டிரெக், சைக்கிள் ஒட்டும் போது தவறுதலாக கோழிக்குஞ்சு  மீது ஏற்றிவிட்டான். இதில், கோழிக்குஞ்சு இறந்து போனது. கோழிக்குஞ்சு இறந்து போனதை அறியாத சிறுவன், கருணையோடு அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றான். 

மருத்துவமனையில் பார்ப்பதற்கு பணம் வேண்டும் என்பதால், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாயை எடுத்துச்சென்றுள்ளான்.  ஒரு கையில் கோழிக்குஞ்சையும் மற்றொரு கையில், 10 ரூபாயுடனும் அப்பாவித்தனமாக சிறுவன் நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் ஆகியுள்ளது. 

சிறுவனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் முதன்முதலாக பகிர்ந்த சங்கா என்பவர், இது பற்றி கூறும் போது, “ சைக்கிள் ஓட்டி பழகும் போது எதிர்பாராத விதமாக கோழிக்குஞ்சு மீது டிரெக் ஏற்றிவிட்டான். இதில் கோழிக்குஞ்சு பரிதாபமாக இறந்துவிட்டது. ஆனால், கோழிக்குஞ்சு இறந்தை அறியாத சிறுவன், அதை கையில் எடுத்துக்கொண்டு தனது தந்தையிடம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு அடம் பிடித்துள்ளான்.  

ஆனால், நான் வரமாட்டேன், வேண்டும் என்றால், நீயே சென்றுவிடு என சொல்லி இருக்கிறார். உடனே, தான் வைத்திருந்த 10 ரூபாயை எடுத்துக்கொண்டு சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான். மருத்துவமனையில் உள்ள செவிலியர் சிறுவனை புகைப்படம் எடுத்துள்ளார்” என்றார்.  சிறுவனின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் செய்திகள்