கோர்ட்டுக்கு சென்று `பாட்டா'வை கலங்கடித்த வாடிக்கையாளர்

ஷூ வாங்கிய நுகர்வோரிடம், துணிப் பைக்கும் சேர்த்து பணம் வசூல் செய்த விவகாரத்தில், பிரபல காலணி நிறுவனமான பாட்டா நிறுவனத்துக்கு (bata) 9000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-15 10:59 GMT
சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் ரதிரி என்பவர் அங்குள்ள பாட்டா நிறுவனத்தில் காலணிகள் வாங்கியுள்ளார். அப்போது, காலணிகளை எடுத்துச் செல்வதற்கான துணிப் பைக்கும் சேர்த்து 3 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அந்த நபர், அங்குள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், நுகர்வோரின் வழக்கு செலவுத்தொகையாக ஆயிரம் ரூபாய், நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகையாக மூவாயிரம் ரூபாய் மற்றும் அபராத தொகையாக ஐயாயிரம் ரூபாய் என மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாயை பாட்டா நிறுவனம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், பொருட்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு இலவசமாக துணி பைகளை வழங்குமாறும் அந்நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்